உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டி.ஏ.பி., உரத்திற்கு மாற்றாக காம்ப்ளக்ஸ் விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி அட்வைஸ்

டி.ஏ.பி., உரத்திற்கு மாற்றாக காம்ப்ளக்ஸ் விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி அட்வைஸ்

டி.ஏ.பி., உரத்திற்கு மாற்றாக காம்ப்ளக்ஸ்விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி அட்வைஸ்கரூர், அக். 27- 'டி.ஏ.பி., உரம் விலை உயர்வால், அதற்கு மாற்றாக காம்ப்ளக்ஸ் மற்றும் சூப்பர் பாஸ்பேட் பயன்படுத்தலாம்' என, கரூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ராமசாமி தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்டத்தில் தற்போது பரவலாக பருவ மழை பெய்து வருகிறது. இதை பயன்படுத்தி விவசாயிகளை சம்பா சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர். நெல் பயிருக்கு டி.ஏ.பி., யூரியா, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் ஆகிய உரங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். டி.ஏ.பி., உரத்திற்கான மூலப்பொருட்கள் விலையேற்றத்தால் உரத்தின் விலை அதிகமாக உள்ளது. 50 கிலோ டி.ஏ.பி., உரத்தில், 9 கிலோ தழைச்சத்தும், 23 கிலோ மணிசத்தும் உள்ளது.இந்த உரத்திற்கு மாற்றாக காம்ப்ளக்ஸ் மற்றும் சூப்பர் பாஸ்பேட் உரங்களை பயன்படுத்தலாம். அதில், மூன்று மூட்டை, 150 கிலோ சூப்பர் பாஸ்பேட்டும், 20 கிலோ யூரியாவும் மற்றும் ஒரு மூட்டை ( 50 கிலோ) 20:20:0:13 காம்ப்ளக்ஸ்சும், 75 கிலோ சூப்பர் பாஸ்பேட்டும் மற்றும் ஒரு மூட்டை (50 கிலோ) 16:20:0:13 காம்பளக்ஸ்சும், 75 கிலோ சூப்பர் பாஸ்பேட் ஆகிய மூன்று வழிகளில் பயன்படுத்தலாம். பயிரின் வளர்ச்சிக்கு அவசியம் தேவைப்படும் கந்தகசத்து காம்ப்ளக்ஸ் உரத்தில், 13 சதவீதமும், சூப்பர் பாஸ்பேட் உரத்தில், 11 சதவீதமும் உள்ளதால், பயிரின் வளர்ச்சியும், மகசூலும் அதிகரிக்கும்.இதனால் டி.ஏ.பி., உரம் இட்ட வயலை போன்றே பயிர் வளர்ச்சி செழித்து விளைச்சலும் அதிகரிக்கும். பயறுவகைகள், எண்ணெய் வித்துக்கள், கரும்பு, பருத்தி, தென்னை மற்றும் தோட்டக்கலை பயறு வகைகள் விவசாயிகளால் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த பயிர்களுக்கு காம்ப்ளக்ஸ் உரம் பயன்படுத்துவதால் பயிரின் தழை மற்றும் சாம்பல் சத்துக்களின் தேவையை பூர்த்தி செய்யப்படுகிறது.மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் டி.ஏ.பி., உரங்கள், 581 டன், காம்ப்ளக்ஸ் உரங்கள், 1,952 டன், சூப்பர் பாஸ்பேட், 316 டன், யூரியா, 1,379 டன் இருப்பில் உள்ளது.இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி