உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அகில இந்திய பெண்கள் கூடைப்பந்து போட்டி:கரூரில் வரும் 7 ல் தொடக்கம்

அகில இந்திய பெண்கள் கூடைப்பந்து போட்டி:கரூரில் வரும் 7 ல் தொடக்கம்

கரூர் :கரூரில், அகில இந்திய பெண்கள் கூடைப்பந்து போட்டி வரும், 7ல், தொடங்குகிறது.கரூர் மாவட்ட கூடைப்பந்து கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. பிறகு, மாவட்ட கூடைப்பந்து கழக சேர்மன் அப்னா தனபதி நிருபர்களிடம் கூறியதாவது:அகில இந்திய பெண்கள் கூடைப்பந்து போட்டி வரும், 7ல், கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் தொடங்கி, 11ல் நிறைவு பெறுகிறது. நாள்தோறும் மாலை நேரத்தில் தொடங்கி, நாக்-அவுட் முறையில் நடக்கும் போட்டியில், 12 அணிகள் பங்கேற்கின்றன. முதல் பரிசு, 50 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசு, 40 ஆயிரம், மூன்றாம் பரிசு, 30 ஆயிரம், நான்காம் பரிசு, 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. 4,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் கேலரிகள் அமைக்கப்படுகின்றன. போட்டிகளை இலவசமாக பார்க்கலாம். வீராங்கனைகள் தங்கும் செலவு, உணவு செலவு ஆகியவற்றை, கூடைப்பந்து கழகமே ஏற்றுக் கொள்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.கூடைப்பந்து கழக தலைவர் கார்த்தி, செயலர் செந்தில்குமார், கரூர் மாவட்ட தொழில் வளர்ச்சி கூட்டமைப்பு இயக்குனர் கோபாலகிருஷ்ணன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ