மேலும் செய்திகள்
வருமான வரியில் விலக்கு; ஓய்வூதியர் தீர்மானம்
27-Jul-2025
கரூர், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம், கரூர் மாவட்ட கிளை மாநாடு, தலைவர் சாமுவேல் சுந்தர பாண்டியன் தலைமையில், அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் நடந்தது.அதில், 70 வயதான ஓய்வூதியர்களுக்கு, 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு, 7,850 ரூபாய் வழங்க வேண்டும், நான்கு தொகுப்புகளாக சுருக்கப்பட்டுள்ள, தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசு வழங்கியுள்ள, 55 சதவீத அகவிலைப்படியை வழங்க வேண்டும், ரயில், விமானத்தில் மூத்த குடிமக்களுக்கு பயண கட்டண சலுகை வழங்க வேண்டும், கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த, காவல் துறை அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநாட்டில், மாநில துணைத்தலைவர் சங்கரி, மாவட்ட துணைத்தலைவர்கள் மோகன் குமார், விஜயலட்சுமி, மாவட்ட செயலாளர் சக்திவேல், பொருளாளர் சோமசுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர்.
27-Jul-2025