உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / உயர்மட்ட பாலம் பணியில் துறைகளுக்குள் பஞ்சாயத்துடி.ஆர்.ஓ., நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு

உயர்மட்ட பாலம் பணியில் துறைகளுக்குள் பஞ்சாயத்துடி.ஆர்.ஓ., நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு

உயர்மட்ட பாலம் பணியில் துறைகளுக்குள் பஞ்சாயத்துடி.ஆர்.ஓ., நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவுகரூர்:கரூர் அருகில், வீரராக்கியத்தில் உயர்மட்ட பாலம் கட்டும் பணியால், அரசு துறைகளுக்கு ஏற்பட்ட பஞ்சாயத்தில், டி.ஆர்.ஓ., நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.கரூரில் இருந்து, சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தவிட்டுபாளையம், மண்-மங்கலம், செம்மடை பிரிவு, பெரிச்சிபாளையம் பிரிவு, மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பெரிய ஆண்டாங்கோவில் வளைவு, திருச்சி நெடுஞ்சாலையில் வீரராக்கியம் பிரிவு, கோடங்கிப்பட்டி பிரிவு ஆகிய பகுதிகளில் கிராமங்களில் இருந்து செல்லும் இணைப்பு சாலைகள் உள்ளன. அந்த சாலையை கடந்து செல்லும் போது, விபத்துகள் ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதன்படி, தேசிய நெடுஞ்சாலைகளில் பெரிச்சிபாளையம் பிரிவு, பெரிய ஆண்டாங்கோவில் பிரிவு, செம்மடை பிரிவு, தவிட்டுப்-பாளையம் பிரிவு, மண்மங்கலம் பிரிவு ஆகிய இடங்களில் உயர்மட்ட பாலங்கள் கட்டப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. அடுத்ததாக, கோடங்கிபட்டி, வீரராக்கியம் ஆகிய இடங்களில் உயர்மட்ட பாலம் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதில், வீரராக்கியம் பாலம் பணியில், நீர்வளத்துறையுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, பணிகள் தாமதமாக தொடங்கப்பட்டுள்ளது.இது குறித்து, தேசிய நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் கூறியதாவது: கரூர், -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், கோடங்கிபட்டி, வீரராக்கியம் ஆகிய இடங்களில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படுகிறது. இதில், கோடங்கிபட்டியில், 21.50 கோடி ரூபாய் மதிப்பில் பாலம் கட்டுமான பணி தொடங்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் வீரராக்கியத்தில், 18.50 கோடி ரூபாய் மதிப்பில் கட்டுமான பணிக்கான பூமி பூஜையை, கரூர் எம்.பி.,ஜோதிமணி தொடங்கி வைத்தார்.பாலத்தில் சர்வீஸ் சாலையை ஒட்டி வீரராக்கியம் ஏரி உள்ளது. இதன் கரையில் தடுப்பு சுவர் அமைக்க, தமிழக நீர்வளத்துறை அனுமதி வழங்கவில்லை. சர்வீஸ் சாலையில் தடுப்பு சுவர் அமைத்தால், வாகனங்கள் வந்து செல்ல சிக்கல் ஏற்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்தது. இரண்டு மாதங்களாக பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின், கரூர் டி.ஆர்.ஓ., கண்ணன் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில், ஏரி கரையில் தடுப்பு சுவர் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன், வீரராக்கியத்தில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி தொடங்கி உள்ளது. இங்கு, வாகனங்கள் செல்ல ஏதுவாக, தற்காலிகமாக சர்வீஸ் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு கூறினர்.டி.ஆர்.ஓ., கண்ணன் கூறுகையில்,'' நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, வீரராக்கியம் ஏரியின் எல்லை அளவீடு செய்யப்பட்டு, அங்கு தடுப்பு சுவர் கட்ட அனுமதி வழங்கப்பட்டு விட்டது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி