உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் ரயில்வே ஸ்டேஷனில் இறுதி கட்டத்தில் அம்ரித் பாரத் திட்டப்பணி

கரூர் ரயில்வே ஸ்டேஷனில் இறுதி கட்டத்தில் அம்ரித் பாரத் திட்டப்பணி

கரூர், கரூர் ரயில்வே ஸ்டேஷனில், அம்ரித் பாரத் திட்டப்பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.கடந்த, 2023 ஆகஸ்ட் மாதம், நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்ட, 108 ரயில்வே ஸ்டேஷன்களில், அம்ரித் பாரத் என்ற திட்டத்தின் கீழ், விரிவாக்கம் செய்யும் பணிகளை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.அதில், கரூர் ரயில்வே ஸ்டேஷனில், 34 கோடி ரூபாய் செலவில், விரிவாக்க பணிகள் தொடங்கியது. கார் பார்க்கிங், டூவீலர் பார்க்கிங், புதிய கழிப்பிட வசதிகள், ரயில்வே ஸ்டேஷன் முகப்பு மாற்றம், கேன்டீன், நகரும் படிக்கட்டுகள், பிளாட்பாரங்களில் இருக்கை வசதி உள்ளிட்ட பணிகள் முக்கியமானவை.கரூர் ரயில்வே ஸ்டேஷனில், அம்ரித் பாரத் திட்டப்பணிகளில், 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இரவு, பகலாக பணியாற்றி வருகின்றனர். திட்டமிடப்பட்ட பணிகளில், 90 சதவீத பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதனால், நாளை பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம், சீரமைப்பு செய்யப்பட்ட கரூர் ரயில்வே ஸ்டேஷனையும் திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி