உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அங்கன்வாடி ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கரூர்: கரூர் மாவட்ட, அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், மாவட்ட பொருளாளர் கலா தலைமையில், கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், அங்கன்வாடிக்கு அடுத்த பட்ஜெட்டில் இரட்டிப்பு நிதி ஒதுக்க வேண்டும், எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளை அங்கன்-வாடி ஊழியர்களே நடத்த அனுமதிக்க வேண்டும், அங்கன்வாடி திட்டத்தை தனியாருக்கு விடக்கூடாது, அங்கன்வாடி ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு ஓராண்டு வழங்க வேண்டும், தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தக் கூடாது உள்ளிட்ட, பல்வேறு கோரிக்-கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் செல்வராணி, மாவட்ட சி.ஐ.டி.யு., தலைவர் ஜீவானந்தம், அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட செய-லாளர் சாந்தி உள்பட, பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை