உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அண்ணாதுரை பிறந்த நாள் விழா கரூரில் இன்று சைக்கிள் போட்டி

அண்ணாதுரை பிறந்த நாள் விழா கரூரில் இன்று சைக்கிள் போட்டி

கரூர், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு, இன்று சைக்கிள் போட்டி நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று காலை, 7:00 மணிக்கு சைக்கிள் போட்டி நடக்கிறது. மாணவர், மாணவியர் இருபாலருக்கும், 3 பிரிவுகளாக நடத்தப்பட உள்ளது. 13 வயதிற்குட்பட்ட மாணவியர்,- 10 கி.மீ. துாரம், 13 வயதிற்குட்பட்ட மாணவர்கள், 15 கி.மீ., 17 வயதிற்குட்பட்ட மாணவியர்,- 15 கி.மீ., 17 வயதிற்குட்பட்ட மாணவர்கள்,- 20 கி.மீ., துாரம் என போட்டி நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்கும மாணவ, மாணவியர் இந்தியாவில் தயாரான சாதாரண சைக்கிளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை