உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நாடகம்

போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நாடகம்

கரூர், கரூர் பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானாவில், டவுன் போலீசார் சார்பில், போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நாடகம் நடந்தது.கரூர் டவுன் டி.எஸ்.பி., செல்வராஜ் தொடங்கி வைத்தார். சாலை விதிகளை கடைப்பிடிக்காமல் செல்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, விழிப்புணர்வு நாடகம் அரங்கேற்றப்பட்டது. அதில், மது அருந்து விட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் பாதிப்பு, விபத்து போன்றவற்றை தத்ரூபமாக நடித்து காட்டினர். நிகழ்ச்சியில், கரூர் டவுன் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.* கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணியை, கல்லுாரி டீன் லோகநாயகி தொடங்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !