உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரவக்குறிச்சி நடுநிலைப்பள்ளியில் துளிர் திறனறிதல் தேர்வு

அரவக்குறிச்சி நடுநிலைப்பள்ளியில் துளிர் திறனறிதல் தேர்வு

அரவக்குறிச்சி;மாணவர்களுடைய அறிவியல் திறனை வளர்க்கும் விதமாக, அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் துளிர் திறனறிவு தேர்வு நடந்தது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மாணவருடைய அறிவியல் திறனை வளர்க்கும் பொருட்டு, பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு ஆயத்தம் செய்யும் பொருட்டும் ஆண்டுதோறும் துளிர் அறிவியல் திறனறிவு தேர்வை நடத்தி வருகிறது. இத்தேர்வில் வெற்றி பெறும் தமிழ் வழி மாணவர்களுக்கு, ஓராண்டு காலத்துக்கு, விஞ்ஞானத் துளிர் புத்தகமும், ஆங்கில வழி மாணவர்களுக்கு ஜந்தர் மந்தர் புத்தகமும் பரிசாக வழங்கப்படுகிறது.மேலும் முதன்மை மதிப்பெண் பெரும் மாணவர்கள் அறிவியல் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவதோடு, அவர்களின் அறிவியல் பங்கேற்புக்கு ஏற்ற அறிவியல் சோதனை பயிற்சிகள் நடத்தப்படுவதற்கான பயிற்சி முகாம்களும் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு முதன்முறையாக அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்தது . பள்ளி தலைமையாசிரியர் சாகுல் அமீது தேர்வை தொடங்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்