உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மின் விளக்கின்றி ஆத்துார் சாலை ;வாகன ஓட்டிகள், மக்கள் அவதி

மின் விளக்கின்றி ஆத்துார் சாலை ;வாகன ஓட்டிகள், மக்கள் அவதி

கரூர்:ஈரோடு பிரிவு - ஆத்துார் விரிவாக்க சாலையில், விளக்குகள் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர். கரூர்-ஈரோடு சாலை பிரிவில் இருந்து ஆத்துார் உள்ளிட்ட, 25க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு, பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்கின்றன. குறிப்பாக, ஆத்துாரில் உள்ள பாரத் பெட்ரோலிய நிறுவனத்துக்கு நாள்தோறும், 100க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் சென்று வருகின்றன. இதனால், கரூர்-ஈரோடு சாலை பிரிவு முதல் ஆத்துார் வரை, சமீபத்தில் சாலை விரிவாக்க பணிகள் நிறைவு பெற்று, தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், மின் கம்பங்கள் அமைக்கப்படவில்லை.இதனால், புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள ஈரோடு சாலை பிரிவு முதல், ஆத்துார் வரை இருளில் மூழ்கியுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே, புதிய விரிவாக்க சாலையில் மின் கம்பங்கள் அமைத்து, விளக்குகளை பொருத்த வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ