உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தேசிய நெடுஞ்சாலையில் பெரும் விபத்து தவிர்ப்பு

தேசிய நெடுஞ்சாலையில் பெரும் விபத்து தவிர்ப்பு

அரவக்குறிச்சி: மதுரை நோக்கி சென்ற பஸ்சின் முன் பக்க டயர் வெடித்ததில், சென்டர் மீடியனை கடந்து எதிர்சாலையில் பஸ் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.சேலத்தில் இருந்து, மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ், அரவக்குறிச்சி அருகே வந்து கொண்டிருந்தபோது, முன் பக்க டயர் வெடித்தது.இதனால், சுதாகரித்துக் கொண்ட ஓட்டுனர் சென்டர் மீடியனை கடந்து, எதிர்சாலையில் பஸ்சை நிறுத்தினார். எதிர்சாலையில் எவ்விதமான வாகனங்களும் கடந்து செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.இதில், பஸ்சில் பயணம் செய்த பயணிகளுக்கு, எவ்விதமான காயங்களும் ஏற்படாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி