உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிக் பாக்ஸிங் போட்டியில் பதக்கம் பெற்றவர்களுக்கு பாராட்டு விழா

கிக் பாக்ஸிங் போட்டியில் பதக்கம் பெற்றவர்களுக்கு பாராட்டு விழா

கரூர், : கிக் பாக்ஸிங் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு, கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், பாராட்டு விழா நடந்தது. கரூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் உமா சங்கர் தலைமைவகித்தார். சென்னையில், தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்கல்வி பல்கலைக்கழக அரங்கில் கடந்த 3, 4, 5 ஆகிய நாட்களில் தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்ஸிங் அசோசியேசன் சார்பில் மாநில அளவிலான போட்டிகள் நடந்தன. இதில், கரூர் மாவட்ட அணி வீரர்கள், 5 தங்கப் பதக்கம், 5 வெள்ளி பதக்கம், 6 வெண்கலப்பக்கம் உட்பட மொத்தம், 16- பதக்கங்களை வென்றனர்.முதல் இடம் பிடித்த ஐந்து மாணவர்கள் இம்மாத இறுதியில் புனே-வில் நடக்கும் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். இவர்களை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.விழாவில், கரூர் அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்க செயலாளர் ரவிக்குமார், துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெயலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ