உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஓட்டுப்பதிவு இயந்திரம் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு முகாம்

ஓட்டுப்பதிவு இயந்திரம் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு முகாம்

குளித்தலை: குளித்தலை பஸ் ஸ்டாண்ட் காந்தி சிலை அருகில் நேற்று மாலை, வருவாய் துறை சார்பில் வாக்காளர்களுக்கு ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து, விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.தாசில்தார் சுரேஷ், டி.எஸ்.ஓ., சுதா, தனி தாசில்தார் நீதிராஜன் ஆகியோர், பொது மக்களிடம் ஓட்டுப்பதிவு செய்யும் போது, எந்த சின்னத்தில் ஓட்டளிக்கிறோம் என்பதை நேரில் பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இந்த இயந்திரத்தில் பொது மக்கள் ஆர்வத்துடன் ஓட்டளித்தனர்.பொது மக்களுக்கு ஓட்டுப்பதிவு செய்யும் போது ஏற்படும் சந்தேகங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. ஆர்.ஐ., ஸ்ரீவித்யா, வி.ஏ.ஓ.,க்கள் முத்துக்குமார், ராமதாஸ், சதீஷ் மற்றும் கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.இதேபோல் நங்கவரம், தோகைமலையிலும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ