உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு பேரணி

கரூரில் மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு பேரணி

கரூர், டிச. 21-கரூர் மாவட்ட மின்வாரியம் சார்பில், மின் சேமிப்பு வார விழா டிச., 14 முதல், 20 வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இதன்படி, கரூர்-கோவை சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் இருந்து, விழிப்புணர்வு பேரணி துவங்கியது.மேற்பார்வை பொறியாளர் சிவக்குமார் தொடங்கி வைத்தார். இதில், மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று, மின்சார சிக்கனம் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியும், கோஷமிட்ட படியும் ஊர்வலமாக சென்றனர். மேலும் மின்சார சிக்கனம் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினர். நிகழ்ச்சியில், கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கணிக்கை மார்த்தாள், உதவி செயற்பொறியாளர் சரணவன், அர்சுணன், உதவி பொறியாளர்கள் கோபி, மோகன், முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை