உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாவட்டத்தில் பா.ஜ., மண்டல தலைவர்கள் பட்டியல் வெளியீடு

கரூர் மாவட்டத்தில் பா.ஜ., மண்டல தலைவர்கள் பட்டியல் வெளியீடு

கரூர்: நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, கரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின், பா.ஜ., மண்டல தலைவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், பா.ஜ., அமைப்பு தேர்தல் நடந்து வருகிறது. முதல் கட்டமாக கிளை தலைவர்கள், மண்டல தலைவர்கள், மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் ஓட்டு எண்ணிக்கை அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். கரூர் மாவட்டத்தில், 22 மண்டலங்கள் உள்ளன. இதில் தேர்தல் முடிந்த, 15 மண்டல தலைவர்கள் பட்டியலை, பா.ஜ., கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் கடந்த, 2ல் வெளியிட்டார். மாநில தலைமை ஒப்புதல் பெறாமல் நிர்வாகி பட்டியல் வெளியிட்டதை, மாநில துணைத் தலைவர் ராமலிங்கம் நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.இந்நிலையில், மாநில தலைமை ஒப்புதலுடன் மீண்டும் நிர்வாகி பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் மண்டல தலைவர்களாக, அரவக்குறிச்சி கிழக்கு ஊராட்சி ஒன்றியம் வி.ரஞ்சித்குமார், அரவக்குறிச்சி மேற்கு ஒன்றியம் ஜவஹர்லால், கரூர் மேற்கு ஒன்றியம் நல்லசிவம், க.பரமத்தி வடக்கு ஒன்றியம் செல்வி, கரூர் மேற்கு மாநகரம் பவானி, கடவூர் வடக்கு ஒன்றியம் ரமேஷ், கடவூர் தெற்கு ஒன்றியம் சுரேஷ், கிருஷ்ணராயபுரம் மேற்கு கோபிநாத், தான்தோன்றிமலை கிழக்கு ஒன்றியம் பாலுசாமி, தான்தோன்றிமலை மேற்கு ஒன்றியம் லஷ்மணன், தோகைமலை மேற்கு ஒன்றியம் செந்தில் குமார், தோகைமலை கிழக்கு ஒன்றியம் ராஜ்குமார், குளித்தலை நகரம் ரம்யா, குளித்தலை ஒன்றியம் பி.ரஞ்சித்குமார், கிருஷ்ணராயபுரம் கிழக்கு ராஜவேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில், மாநில துணைத் தலைவர் ராமலிங்கத்திடம், தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் வாழ்த்து பெற்றனர். அப்போது மாவட்ட தலைவர் செந்தில்நாதன் உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ