இடிந்து விழும் நிலையில் உள்ள நிழற்கூடம் சீரமைக்கப்படுமா?
கரூர், டிச. 17-கரூர் அருகே, எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ள, நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.கரூர் - ஈரோடு சாலை புன்னம் சத்திரம் பஸ் ஸ்டாப் பகுதியில், பயணிகள் வசதிக்காக, முன்னாள் எம்.பி., தம்பிதுரை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, ஐந்து லட்ச ரூபாய் செலவில் கடந்த, 2012-13 ல் நிழற்கூடம் கட்டப்பட்டது.நிழற்கூடத்தை, புன்னம் சத்திரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொது மக்கள், பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் பயணிகள் நிழற்கூடத்தின் ஒரு பகுதி சேதம் அடைந்தது. அதை முழுமையாக சீரமைக்காமல் விட்டுள்ளனர்.தற்போது, நிழற்கூடம் எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. , பஸ்சுக்காக காத்திருக்கும் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, புன்னம் சத்திரம் பஸ் ஸ்டாப்பில் உள்ள, நிழற்கூடத்தை உடனடியாக சீரமைக்க, கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.