மேலும் செய்திகள்
சூலுார் ரயில்வே ஸ்டேஷனில் ஆலோசனை குழுவினர் ஆய்வு
30-Oct-2024
கரூர் ரயில்வே ஸ்டேஷனில் கேன்டீன்அறை மூடல்: பயணிகள் கடும் அவதிகரூர், நவ. 19-கரூர் ரயில்வே ஸ்டேஷனில், பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த கேன்டீன் அறை மூடப்பட்டது. இதனால், பயணிகள் அமர்ந்து சாப்பிட முடியாமல் அவதிப்படுகின்றனர்.தென் மாவட்டங்களின், நுழைவு வாயிலாக உள்ள, கரூர் வழியாக நாள்தோறும், 40 க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றன. திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், ஈரோடு பகுதிகளில் இருந்து நாள்தோறும், ஆயிரக்கணக்கான பயணிகள், பல்வேறு பணிகள் காரணமாக கரூருக்கு ரயிலில் வந்து செல்கின்றனர்.பயணிகள் வசதிக்காக, கரூர் ரயில்வே ஸ்டேஷனில் கேன்டீன் மற்றும் அமர்ந்து சாப்பிட வசதியாக தனியாக அறையும் இருந்தது.இந்நிலையில், கேன்டீன் அறையை வணிக பிரிவை சேர்ந்த அதிகாரிகள் மூடி விட்டனர். அதை, வீடியோ கண்காணிப்பு அறையாக மாற்றி விட்டனர். இதனால், கரூர் ரயில்வே ஸ்டேஷனில், கேன்டீனில் உணவு பொருட் களை வாங்கும் பயணிகள் அமர்ந்து சாப்பிட முடியாமல், பிளாட்பாரத்தில் நின்று கொண்டே, சாப்பிடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, வழக்கமான ரயில்களுடன், சில சிறப்பு ரயில்களும், கரூர் வழியாக இயக்கப்படுகின்றன. எனவே, பயணிகள் நலன் கருதி, கரூர் ரயில்வே ஸ்டேஷனில் மூடப்பட்ட, கேன்டீன் அறையை திறக்க, சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
30-Oct-2024