| ADDED : மே 08, 2024 05:27 AM
குளித்தலை : அரவக்குறிச்சி, மாரியம்மன் கோவில் ராஜபுரத்தை சேர்ந்தவர் முரளி, 25. தனக்கு சொந்தமான மாருதி சுசூகி காரில் கடந்த, 5 மதியம் 2:00 மணியளவில் திருச்சி நோக்கி சென்றார். அப்போது, குளித்தலை கடம்பர்கோவில் பேக்கரி முன், முன்னால் சென்ற அசோக் லைலேண்ட் லாரி டிரைவர், சாலை விதிமுறைகளை பின்பற்றாமல் திடீரென பிரேக் போட்டார். இதில் லாரியின் பின்புறம் கார் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த முரளி, அவரது அண்ணன் மற்றும் உறவினர் பாரதி, அஜித், ஆகிய நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். குளித்தலை அரசு மருத்துவமனையில், முதலுதவி சிகிச்சை பெற்று, பின்னர் மேல் சிகிச்சைக்காக முசிறி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முரளி கொடுத்த புகார்படி, திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தை சேர்ந்த லாரி டிரைவர் சந்திரசேகரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.