மேலும் செய்திகள்
தேனியில் இரு மகள்களுடன் தாய் மாயம்
12-Jul-2025
குளித்தலை: குளித்தலை அடுத்த மகாதானபுரம் பஞ்., தீர்த்-தம்பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ்; இவரது மனைவி சித்ரா, 30; இவர்களுக்கு, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவர் சுரேஷ், தினமும் மது குடித்துவிட்டு வந்து சண்டையிட்டு வந்-துள்ளார். மேலும், சுரேஷின் தாயார் ராணி, சித்-ராவை துன்புறுத்தி வந்துள்ளனர். இதுகுறித்து சித்ரா கொடுத்த புகார்படி, குளித்தலை மகளிர் போலீசார், கடந்த, 24ல், கணவர் சுரேஷ், மாமியார் ராணி, சின்ன மாமியார் மகேஸ்வரி, இவருடைய மகள் ராஜேஸ்வரி, இவரது கணவர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.அப்போது, சுரேஷ், மனைவியுடன் வாழ விருப்-பமில்லை என தெரிவித்ததால், இருவரிடமும் வாக்குமூலம் பெற்றனர். பின், ஸ்டேஷனுக்கு வெளியே சென்ற சுரேஷ், கையில் வைத்திருந்த விஷமருந்தை குடித்துவிட்டு மயங்கினார். அவரை மீட்டு, குளித்தலை அரசு மருத்துவம-னையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். விசாரணைக்கு வந்தவர் விஷம் குடித்ததால், அவர் மீது நடவ-டிக்கை எடுக்கக்கோரி, மகளிர் இன்ஸ்பெக்டர் கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் சுரேஷ் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
12-Jul-2025