உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிரானைட் கல் கடத்தல் மூவர் மீது வழக்கு பதிவு

கிரானைட் கல் கடத்தல் மூவர் மீது வழக்கு பதிவு

குளித்தலை: குளித்தலை அடுத்த, கடவூர் தாலுகா பகுதியில் அனுமதியில்-லாமல் கிராவல் மண், வாரி மணல், கிரானை கல், சலித்த மணல் கடத்துவதாக தொடர்ந்து புகார் சென்றன. இதன் அடிப்படையில், கரூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியிய-லாளர் சங்கர், 41, தலைமையில் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில் தரகம்பட்டியில் உள்ள கரூர் - திருச்சி நெடுஞ்சா-லையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, வேகமாக வந்த இரண்டு டாரஸ் டிரைலர் லாரி-களை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அரசு அனுமதியில்-லாமல் கிரானைட் கல் ஏற்றிச் சென்றது தெரியவந்தது. இதுகு-றித்து சங்கர் கொடுத்த புகார்படி, மதுரை மாவட்டம், மேலுார் அடுத்த கச்சடையான்பட்டி திவாகர், 32, கீழையூர் சரவணன், 46, பிரசாந்த், 40, ஆகியோர் மீது, சிந்தாமணிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, இரண்டு லாரிகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை