| ADDED : நவ 29, 2025 01:19 AM
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் பகுதியில், மரவள்ளி கிழங்கு அறுவடை பணிகள் துவங்கியுள்ளது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவாயம், வேப்பங்குடி, குழந்தைப்பட்டி, கோடங்கிப்பட்டி, பாப்பகாப்பட்டி, மலையாண்டிப்பட்டி, மகிளிப்பட்டி பகுதிகளில் விவசாயிகள் பரவலாக மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்துள்ளனர். கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. மழையும் பெய்ததால் பயிர்கள் வளர்ச்சி கண்டுள்ளது. தற்போது கிழங்கு அறுவடை பணிகளில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.நல்ல தரமான மரவள்ளி கிழங்கு டன் ஒன்று 5,500 ரூபாய் விலையில் விற்பனைக்கு எடுத்து செல்கின்றனர். சேலம், நாமக்கல், திண்டுக்கல் பகுதிகளில் உள்ள மாவு அரைக்கும் மில்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. தற்போது சீரான விலையில் கிழங்கு விற்பனை நடப்பதால், விவசாயிகளுக்கு ஓரளவு வருமானம் கிடைத்து வருகிறது.