உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் ரயில்வே குகை வழிப்பாதையில் கால்நடை நடமாட்டத்தால் இடையூறு

கரூர் ரயில்வே குகை வழிப்பாதையில் கால்நடை நடமாட்டத்தால் இடையூறு

கரூர்: கரூர் அருகே, வெங்கமேடு பெரிய குளத்துப்பாளையம், கரூர் டவுன் எம்.ஜி., சாலையை இணைக்கும் வகையில், ஈரோடு ரயில்வே வழித்தடத்தில் குகை வழிப்பாதை கட்டப்பட்டது. அதை பொதுமக்கள், தற்-போது பயன்படுத்தி வருகின் றனர். இந்த குகை வழிப்பாதையின் உட்புறம் அவ்வப்போது கால்நடைகள் சுற்றித்திரிவதால் மற்ற வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத நிலை உள்ளது.கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கால்நடை-களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. தற்போது குகை வழிப்பாதையிலும் கால்நடைகள் நடமாட்டம் உள்ளது. அங்கு, ஒரே இடத்தில் கால்நடை நின்று விடுவதால், குகைவழிப்-பாதையை கடப்பதற்கும் சிரமப்பட வேண்டியுள்ளது. இந்த குறுக-லான பாதையில், வாகனங்கள் சென்று வரும்போது கால்நடை-களை உரசி செல்வதால், அவை காயம் அடைவதுடன், இருசக்கர வாகனங்களில் வந்து செல்வோர் விபத்துக்குள்ளாகின்றனர். கால்ந-டைகளை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !