உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தோகைமலை பஸ் ஸ்டாண்டில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்

தோகைமலை பஸ் ஸ்டாண்டில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்

குளித்தலை, : தோகைமலை பஸ் ஸ்டாண்டில், 'சிசிடிவி' கேமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தோகைமலை பஸ் ஸ்டாண்டில், ஒரு நாளைக்கு குறைந்தபட்சம், 1,000 பயணிகள் வந்து செல்கின்றனர். குளித்தலை அடுத்த, தோகைமலை பஸ் ஸ்டாண்டில், 25க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. பஸ் ஸ்டாண்டில், கண்காணிப்பு கேமரா செயல்படாமல் பெயரளவிலே இருக்கிறது. எந்த இணைப்பும் இல்லாமல், கேமரா மட்டும் தொங்கி கொண்டிருக்கிறது.பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதில் ஈடுபடுவோர் மீது, சட்டபடி நடவடிக்கை எடுக்கவும், பஸ் ஸ்டாண்டுக்குள் தனியார் வாடகை வாகனங்கள் நிறுத்தம் செய்தல், பஸ் ஸ்டாண்டுக்குள் வராத அரசு மற்றும் தனியார் பஸ்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும், இப்பகுதியில் 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்த, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி