ரூ.3.52 கோடி மதிப்பில் நுாலக கட்டடம் காணொளியில் முதல்வர் திறந்து வைப்பு
கரூர்: சென்னையிலிருந்து, முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக கரூர் மாவட்டத்தில், 3.52 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நுாலக கட்டடங்களை திறந்து வைத்தார். தொடர்ந்து, கரூர் வெண்ணைமலையில் ஊர்ப்புற நுாலகம் புதிய கட்டட திறப்பு விழாவில் கலெக்டர் தங்கவேல் கலந்து கொண்டார். அப்போது, அவர் கூறியதாவது:கரூர் மாவட்டம், பவித்திரத்தில், 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய கட்டடத்தில் கிளை நுாலகம், வெள்ளியணையில், 22 லட்சம் மதிப்பில் கிளை நுாலகம், அரங்கநாதன்பேட்டையில், 22 லட்சம் மதிப்பீட்டிலான புதிய கட்டடத்தில், ஊர்ப்புற நுாலகம், க.பரமத்தியில், 22 லட்சம் மதிப்பீட்டிலான இணைப்பு கட்டடத்தில், ஊர்ப்புற நுாலகம், கீழகுட்டப்பட்டியில், 22 லட்சம் மதிப்பீட்டிலான புதிய கட்டடத்தில், ஊர்ப்புற நுாலகம், வெண்ணைமலையில், 22 லட்சம் ரூபாயில் ஊர்ப்புற நுாலக புதிய கட்டடம் என மொத்தம், 3.52 கோடி ரூபாய் மதிப்பில் நுாலக கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் சரவணன், மாவட்ட நுாலக அலுவலர் சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வி, விஜயலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.