உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / முதல்வர் கோப்பை டேபிள் டென்னிஸ் வெண்ணைமலை சேரன் பள்ளி சாதனை

முதல்வர் கோப்பை டேபிள் டென்னிஸ் வெண்ணைமலை சேரன் பள்ளி சாதனை

கரூர், முதல்வர் கோப்பை டேபிஸ் டென்னிஸ் போட்டியில், வெண்ணைமலை சேரன் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.செங்கல்பட்டில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக மைதானத்தில், முதல்வர் கோப்பைக்கான டேபிள் டென்னிஸ் போட்டி, அக்., 10, 11ல் நடந்தது. இப்போட்டியில் கரூர் மாவட்ட அணியில், கரூர் வெண்ணைமலை சேரன் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் ஹரிஷ், குகன் ஆகியோர் இரட்டையர் பிரிவில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் மற்றும் ரொக்க பரிசாக, 50,000 ரூபாய் பெற்றனர்.போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள், பயிற்சி அளித்த பயிற்சியாளர்கள் ஆகியோருக்கு, பள்ளி செயலர் பெரியசாமி, தாளாளர் பாண்டியன், முதல்வர் பழனியப்பன் ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி