உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் குடிநீரில் குளோரினேசன் அவசியம்

க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் குடிநீரில் குளோரினேசன் அவசியம்

கரூர், க.பரமத்தி ஊராட்சி ஒன்றித்திற்குட்பட்ட, 30க்கும் மேற்பட்ட கிராமங்களில், ஆறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.கடந்த தினங்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. அவ்வப்போது வரும் மாறுபட்ட சீதோஷ்ண நிலை காரணமாக மக்கள் காய்ச்சல், சளி உள்ளிட்ட உபாதைகளுக்கு ஆளாகி வருவதை தடுக்க பஞ்., நிர்வாகம் சரியான அளவில் குளோரினேசன் செய்யப்பட்ட குடிநீரை பொதுமக்களுக்கு வினியோகிக்க வேண்டும். இதன் மூலம் தண்ணீரால் பரவக்கூடிய காலரா, டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட நோய்கள் பரவுவதை தடுக்க முடியும்.அவ்வாறு குளோரினேசன் செய்யப்பட்டு வினியோகப்படுகிறதா என்பது தெரியவில்லை. இதனை, தினமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சோதனையிட வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.எனவே, பொதுமக்களுக்கு வினியோகிக்கும் குடிநீரில், சரியான அளவில் குளோரினேசன் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை