உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சி.ஐ.ஐ., கருத்தரங்கு

சி.ஐ.ஐ., கருத்தரங்கு

கரூர்: கரூரில், சி.ஐ.ஐ., சார்பில், 'கரூர் விஷன்-2030' கருத்தரங்கம் நடந்தது. இதில், மாவட்ட தலைவர் பிரபு தலைமை வகித்தார். கரூர் எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பா-லாஜி பங்கேற்றார்.கரூர் ஏற்றுமதியை, 50,000 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்த இலக்கை அடைவதற்கு, அரசு தரப்பில் என்னென்ன வச-திகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்பது குறித்து, தமிழக அரசுடன் கலந்து ஆலோசித்து தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதி-களை உருவாக்கி தருவதாக தெரிவித்தார்.நிகழ்ச்சியில், கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியா-ளர்கள் சங்க தலைவர் கோபால கிருஷ்ணன், மாவட்ட வர்த்தக மற்றும் தொழில் கழக செயலர் வெங்கடராமன், தொழில் அதி-பர்கள் நாகராஜன், தேவராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !