ரூ.25.29 லட்சம் மதிப்புள்ள தேங்காய், கொப்பரை ஏலம்
கரூர், சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய், கொப்பரை தேங்காய் சேர்த்து, 25 லட்சத்து, 29 ஆயிரத்து, 132 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.நொய்யல் அருகேயுள்ள, சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 6,003 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 55.65 ரூபாய், அதிகபட்சமாக, 78.79 ரூபாய், சராசரியாக, 67.15 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம் 1,834 கிலோ எடையுள்ள தேங்காய்கள், 1 லட்சத்து, 22 ஆயிரத்து, 123 ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோல் கொப்பரை தேங்காய், முதல்தரம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 208.89 ரூபாய், அதிகபட்சமாக, 218.99 ரூபாய், சராசரியாக, 216.99 ரூபாய், இரண்டாம் தரம் குறைந்தபட்சம், 140 ரூபாய், அதிகபட்சம், 210.39 ரூபாய், சராசரியாக, 188.99 ரூபாய்க்கு ஏலம் போனது. 12,553 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய், 24 லட்சத்து, 7,009 ரூபாய்க்கு விற்பனை நடந்தது. தேங்காய், கொப்பரை தேங்காய் சேர்த்து, 25 லட்சத்து, 29 ஆயிரத்து, 132 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.