உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சின்னதாராபுரத்தில் முதல்வர் கிராம சாலை பணிகளை கலெக்டர் ஆய்வு

சின்னதாராபுரத்தில் முதல்வர் கிராம சாலை பணிகளை கலெக்டர் ஆய்வு

கரூர்: க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், சின்னதாராபுரம் பஞ்., ஊரக வளர்ச்சித் துறை மூலம், பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் தங்கவேல் ஆய்வு மேற்கொண்டார்.பின், அவர் கூறியதாவது:கரூர் மாவட்டத்தில் உள்ள, 7 ஊராட்சி ஒன்றியங்-களில், நான்கரை ஆண்டுகளில் முதல்வர் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 200.85 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 598.80 கி.மீ. சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதில், சின்னதாராபுரம் பஞ்சாயத்தில், 22.20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி, மொஞ்சனுார் பஞ்.,ல், 31.85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி உள்-பட மொத்தம், 1.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடக்கும் பணிகளை பார்வையிட்டு சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அனைத்து வளர்ச்சி திட்ட பணிகளையும் தரமா-கவும், உரிய கால அளவிலும் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர, அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, கூறினார்.ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வீரபத்திரன் உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை