உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கல்லுாரி பெண் கணக்காளர் மாயம்

கல்லுாரி பெண் கணக்காளர் மாயம்

கரூர் கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியை சேர்ந்த சுரேஷ் மனைவி சண்முகபிரியா, 37, இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சண்முக பிரியா, கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே காருடையாம்பாளையத்தில் உள்ள, வி.எஸ்.பி., என்ற தனியார் பொறியியல் கல்லுாரி விடுதியில் தங்கி, கணக்காளராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த, 19 இரவு கல்லுாரி விடுதியில் இருந்து, வெளியே சென்ற சண்முக பிரியா இதுவரை வரவில்லை. இதுகுறித்து அவரது கணவர் சுரேஷ் போலீசில் புகார் செய்தார். க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சண்முகபிரியாவை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி