மேலும் செய்திகள்
சமுதாயக்கூடம் கட்ட பூமி பூஜை
12-Aug-2025
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து பகுதியில் உள்ள சமுதாய கூடம், மோசமாக இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சமுதாய கூடம், சிவன் கோவில் அருகில் உள்ளது. சமுதாய கூடத்தில் பழுது ஏற்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகிறது. இதுவரை புனரமைப்பு செய்யப்படாமல் இருப்பதால், சுப நிகழ்ச்சிகளை நடத்த முடியாமல் ஏழை, நடுத்தர மக்கள் அவதியுறுகின்றனர். மேலும் சமுதாயக்கூடம் பலவீனமடைந்து சிதிலமடைந்துள்ளது.சின்டெக்ஸ் தொட்டி உடைந்து காணப்படுகிறது. கட்டடத்தை சுற்றி அதிகமான செடிகள் வளர்ந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.எனவே,சிதிலமடைந்துள்ள சமுதாய கூடத்தை புதுப்பிக்க டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
12-Aug-2025