உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் புதிய பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்டதும் திருமாநிலையூர் ரவுண்டானாவில் நெரிசல்

கரூர் புதிய பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்டதும் திருமாநிலையூர் ரவுண்டானாவில் நெரிசல்

கரூர், கரூர் புதிய ஸ்டாண்ட் திறப்பால், திருமாநிலையூர் ரவுண்டானாவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.கரூர் மாநகராட்சி திருமாநிலையூரில் புதிய பஸ் ஸ்டாண்ட் கடந்த அக்., 6 முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. பழைய பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வந்த வரை, திருச்சி, மணப்பாறை, குஜிலியம்பாறை வழியாக திண்டுக்கல் செல்லும் பஸ்கள் மட்டுமே திருமாநிலையூர் ரவுண்டானா வழியாக வந்து சென்றன. தற்போது புதிய பஸ் ஸ்டாண்ட் திறப்பால், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய பஸ்களும் திருமாநிலையூர் ரவுண்டானா வழியாக செல்கின்றன. இதனால் ரவுண்டானாவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.காலை, மாலை நேரத்தில் பள்ளி வாகனங்கள் வருவதால், போக்குவரத்து நெருக்கடி காரணமாக வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டி உள்ளது. வாகன ஓட்டிகள், 15 முதல் 30 நிமிடம் வரை கடந்து செல்ல நேரமாகிறது. விபத்தில் சிக்கியவர்கள் மற்றும் உடல் நலம் குன்றியவர்களை அழைத்து செல்லும், ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் செல்ல படாதபாடுபட வேண்டி உள்ளது. புதிய பஸ் ஸ்டாண்ட் தொடங்கப்பட்டுள்ளதால், பயணிகள் வசதிக்காக பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக பஸ்கள் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். போக்குவரத்து நெருக்கடியை கருத்தில் கொண்டு, வெளியூரில் இருந்து வரும் பஸ்களை மட்டும் திருமாநிலையூர் ரவுண்டானா வழியாக இயக்க வேண்டும். புதிய பஸ் ஸ்டாண்ட்டிலிருந்து, வெளியூர் புறப்பட்டு செல்லும் பஸ்களை, சுக்காலியூர் வழியாக இயக்க வேண்டும். அப்போதுதான், ஓரளவு போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும். சில மாதங்கள் கழித்து அனைத்து பஸ்களையும் பைபாஸ் வழியாக இயக்க வேண்டும். கரூர் புதிய ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட் இடையில் தடையில்லாமல் டவுன் பஸ்களை இயக்கினால், பயணிகள் போக்குவரத்துக்கு எந்த பிரச்னையும் ஏற்படாது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை