மேலும் செய்திகள்
கரூர் தாலுகா அலுவலகத்தில் மூன்றாம் நாள் ஜமாபந்தி
28-May-2025
கரூர் :வீட்டுமனை பட்டா கேட்டு, கரூர் மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் சங்கத் தலைவர் சரவணன் தலைமையில், கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பிரபாகரனிடம் மனு அளித்தனர்.அதில், கூறியிருப்பதாவது:கிருஷ்ணராயபுரம் அருகில் கள்ளப்பள்ளி, கோரகுத்தி, மேட்டுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள், கட்டுமானம் மற்றும் விவசாய கூலிகளாக வேலை செய்து வருகின்றனர். குடியிருப்பதற்கு போதிய வீடுகள் இல்லாததால், ஒரே வீட்டில் இரண்டு, மூன்று குடும்பங்களாக வசித்து வருகிறோம். குடியிருப்பதற்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி, பல ஆண்டுகளாக மனு அளித்து வருகிறோம். இதனிடையே, கடந்த ஆறு மாதங்களுக்கு முன் வருவாய் துறை அதிகாரிகள், எங்களிடம் வீடு இல்லாதது குறித்து விசாரணை மேற்கொண்டனர். இன்று வரை இலவச வீட்டுமனை பட்டா வழங்கவில்லை. விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.சி.ஐ.டி.யு., சங்க மாவட்ட துணைத் தலைவர் சுப்ரமணியன், மா.கம்யூ., கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
28-May-2025