மேலும் செய்திகள்
இலவச மனைப்பட்டா கோரி மனு
06-Dec-2024
கரூர்: கரூர் மாவட்ட, கட்டுமான தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.,) சார்பில், மாவட்ட தலைவர் சரவணன் தலைமை யில், ஜெகதாபி வி.ஏ.ஓ., அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட, இலவச வீட்டு மனை பட்டாவில் கலைஞர் கனவு இல்லம் திட்டம், பிரதமர் தொகுப்பு வீடு கட்டும் திட்டத்தின் கீழ், வீடு கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், புலியூர், காளிப்பாளையம் பகுதியில் பட்டியல் இன மக்களுக்கு, இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்-வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், மாநில குழு உறுப்பினர் ராஜேஸ்வரி, மாவட்ட சி.ஐ.டி.யு.,செயலாளர் முருகேசன், கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் ராஜா முகமது, நிர்வாகி ராஜேந்திரன் உள்பட, பலர் பங்கேற்றனர்.
06-Dec-2024