கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை
கரூர், டிச. 15-கரூர் மாவட்டத்தில், தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் கடந்த, ஐந்து நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை, நேற்று அதிகாலை வரை பெய்தது. பிறகு கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், வானம் மேகமூட்டமாக காணப் பட்ட போதிலும், அடிக்கடி வெயில் அடித்தது.நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில், கரூர் மாவட்டத்தில் பெய்த மழையளவு விபரம் (மி.மீ.,) கரூர், 31, அரவக்குறிச்சி, 26.50, அணைப்பாளையம், 42, க.பரமத்தி, 24.20, குளித்தலை, 16.40, தோகைமலை, 43.40, கிருஷ்ணராயபுரம், 32.50, மாயனுார், 38, பஞ்சப்பட்டி, 27, கடவூர், 22, பாலவிடுதி, 11, மயிலம்பட்டி, 8 மி.மீ., மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 26.83 மி.மீ., மழை பதிவானது.