உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் கூலிங்கிளாஸ் கண்ணாடி விற்பனை

கரூரில் கூலிங்கிளாஸ் கண்ணாடி விற்பனை

கரூர்: கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், கரூரில் கூலிங்கிளாஸ் விற்பனை ஜோராக நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் கோடைக்காலம் காரணமாக, வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பது வழக்கம். ஆனால் நடப்பாண்டு மார்ச் மாத துவக்கத்தில் இருந்தே, தமிழகத்தில் கோடையை போல் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால், பகல் நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதிப்படுகின்றனர்.வெப்ப சூட்டில் இருந்து தப்பிக்க, இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள், கூலிங்கிளாஸ் கண்ணாடி அணிந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சாலையோரங்களில் கூலிங்கிளாஸ் விற்பனை சுறுசுறுப்பாக நடந்து வருகிறது.தெலுங்கானா மாநிலம், ைஹதராபாத் நகரில் இருந்து கூலிங்கிளாஸ் கண்ணாடிகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளளன. குறைந்தபட்சமாக, 50 முதல், 150 ரூபாய் வரை கூலிங்கிளாஸ் கண்ணாடி விற்பனை செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி