உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரூ.46.37 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்

ரூ.46.37 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்

கரூர், சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 46 லட்சத்து, 37 ஆயிரத்து, 125 ரூபாய்க்கு கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது.நொய்யல் அருகே, சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. 446 மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 233.05 ரூபாய், அதிகபட்சமாக, 239.40 ரூபாய், சராசரியாக, 237.89 ரூபாய், இரண்டாம் தரம் குறைந்தபட்சம், 171.90 ரூபாய், அதிகபட்சம், 234.70 ரூபாய், சராசரியாக, 212.90 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 20,959 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய், 46 லட்சத்து, 37 ஆயிரத்து, 125 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ