கோவக்குளம் கிராமத்தில் சோளம் பயிர்கள் சாகுபடி
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் அடுத்த கோவக்குளம், பிச்சம்பட்டி பகுதிகளில் நெல் அறுவடை செய்யப்பட்டது. தற்போது விவசாயிகள், விளை நிலங்களில் உழவு செய்து, அதில் சோளம் நடவு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சாகுபடிக்குதேவையான தண்ணீர் வாய்க்கால், போர்வெல் மூலம் பாய்ச்சப்படுகிறது. தற்போது சோளம் பயிர் சாகுபடி மூலம், விவசாயிகளுக்கு ஓரளவு வருமானம் கிடைத்து வருகிறது.