கரூர் அரசு கலைக்கல்லுாரியில் கலந்தாய்வு ஜூன் 2ல் தொடக்கம்
கரூர்: கரூர் அரசு கலைக்கல்லுாரியில், இளம் கலை, இளம் அறிவியல் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான (2025-26) கலந்தாய்வு கூட் டம் வரும் ஜூன், 2ல் தொடங்குகிறது.இதுகுறித்து, கல்லுாரி முதல்வர் ராதா கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரூர் அரசு கலைக்கல்லுாரியில், முதலாமாண்டு பி.ஏ., தமிழ் மற்றும் ஆங்கிலம், பி.காம்., பி.காம்., சி.ஏ., பி.பி.ஏ., பி.ஏ., வரலாறு மற்றும் பொருளாதாரம், பி.எஸ்.சி., உள்ளிட்ட, 18 பாடப்பிரிவுகளில் உள்ள, 1,485 இடங்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. முதல் கட்ட கலந்தாய்வு வரும் ஜூன், 2, 3ல் நடக்கிறது. அதில், சிறப்பு பிரிவுகளான என்.சி.சி., முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடக்கும். பொது கலந்தாய்வு கூட்டம் வரும், 4 முதல், 14 வரை நடக்கிறது. மேலும், மாணவ, மாணவியர் தங்களின் தரவரிசை பட்டியலை, www.gackarur.ac.inஎன்ற இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். கலந்தாய்வுக்கு வரும் மாணவ, மாணவியர் கல்வி சான்று, ஜாதி சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவை அசல் மற்றும் மூன்று ஜெராக்ஸ் நகல் கொண்டு வர வேண்டும். முதலாமாண்டு வகுப்புகள் வரும் ஜூன், 30ல் தொடங்குகிறது, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.