உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நீதிமன்ற உத்தரவால் கரூரில் கொடி கம்பம் அகற்றும் பணி விறு விறு

நீதிமன்ற உத்தரவால் கரூரில் கொடி கம்பம் அகற்றும் பணி விறு விறு

கரூர், கரூர் மாநகராட்சி பகுதியில் அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், ஜாதி அமைப்புகளின் கொடி கம்பங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.தேசிய, மாநில நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சி அமைப்பு ஆகியோருக்கு சொந்தமான பொது இடங்களில் அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், ஜாதி, மத அமைப்புகளின் கொடிக்கம்பங்கள் உள்ளன. இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், சாலையை பயன்படுத்து வோருக்கு பல்வேறு சிரமங்களும் ஏற்படுகிறது. கட்சி தலைவர்கள், சமுதாய தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாளின் போது கொடி கம்பம் அமைந்துள்ள பகுதி முழுவதுமாக ஆக்கிரமிக்கப்படுகிறது. இந்த கொடி கம்பங்களை அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.இதன்படி, கரூரில் கொடிகம்பங்கள் அகற்றும் பணி நேற்று முதல் நடந்து வருகிறது. அரசியல் கட்சியினர், தொழிற்சங்கம், ஜாதி அமைப்பு உள்பட 240க்கும் மேற்பட்ட கொடி கம்பம் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில், கரூர் பஸ் ஸ்டாண்ட், சர்ச் கார்னர், லைட்ஹவுஸ், திண்ணப்பா கார்னர், தான்தோன்றிமலை, ராயனுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொடி கம்பங்கள் அகற்றப்பட்டன. கொடி கம்பங்களை, அந்தந்த கட்சியை சேர்ந்தவர்களே அகற்றி வருகின்றனர். அந்தந்த கட்சி கொடி கம்பங்களை, அகற்ற தவறினால் அரசு சார்பில் அகற்றிவிட்டு, அதற்கான செலவை சம்பந்தப்பட்ட கட்சி அமைப்புகளிடம் வசூலிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை