கரூர் அரசு மருத்துவ கல்லுாரியில் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி
கரூர், தமிழ் பண்பாட்டின் பெருமையை, இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் வகையில், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி கலையரங்கில் மாபெரும் தமிழ் கனவு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடந்தது.டி.ஆர்.ஓ., (நிலமெடுப்பு) விமல்ராஜ் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில், தமிழகத்தின் தொன்மையையும் சிறப்பையும் விளக்கும் கீழடி, இரும்பின் தொன்மை, ராஜராஜ சோழன் ஆகிய காணொலிகள் திரையிடப்பட்டன. உயர்கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில், கல்வித் திட்ட விளக்க காணொலி ஒளிபரப்பப்பட்டது. சொற்பொழிவாளர்களிடம் தரமான கேள்விகளை எழுப்பிய மாணவர்களை பாராட்டி சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், உதவி ஆணையர் (கலால்) கருணாகரன், திருச்சி மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்லுாரி முதல்வர் சாந்திமலர், கரூர் தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) சுதா உள்பட பலர் பல்கேற்றனர்.