உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தந்தை பேசாததால் மகள் தற்கொலை

தந்தை பேசாததால் மகள் தற்கொலை

ஈரோடு, ஈரோடு ரங்கம்பாளையம் இரணியன் வீதியை சேர்ந்த ஜெய்சங்கர் மகள் பிரியதர்ஷினி, 20; பி.காம்., பட்டதாரி. பைனான்சில் ஆறு மாதமாக வேலை செய்தார். ஜெய்சங்கர் மது பழக்கத்துக்கு அடிமையானார். அவரை திட்டி பிரியதர்ஷினி புத்திமதி கூறியுள்ளார்.கடந்த, 1ல் மது போதையில் வீட்டுக்கு சென்றவர் மகளை அடித்துள்ளார். இதனால் மகளிடம் பேசாமல் இருந்துள்ளார். கடந்த, 5ம் தேதி மாலை வீட்டில் இருந்த தந்தையை பிரியதர்ஷினி சாப்பிட அழைத்துள்ளார். சாப்பிடாமல் சென்றதால் வீட்டுக்குள் சென்று துப்பட்டாவில் துாக்கிட்டு கொண்டார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஓட்டை பிரித்து உள்ளே சென்று பிரியதர்ஷினியை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை