மேலும் செய்திகள்
சிறுமி மாயம்; தந்தை புகார்
06-Jan-2025
குளித்தலை: குளித்தலை அடுத்த, கண்ணமுத்தாம்பட்டியை சேர்ந்தவர் ரங்கநாதன், 50, விவசாய கூலி தொழிலாளி. இவரது மகள் சபிதா, 23, எம்.எஸ்சி., பட்டதாரி. நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்து சபிதா வெளியே சென்றார். வெகு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்த வித தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என தந்தை கொடுத்த புகார்படி, லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
06-Jan-2025