தாயகம் திரும்பியோரின் கடனை நீக்க முடிவு; கலெக்டர் அறிவிப்பு
கரூர், டிச. 15-பர்மா, இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து தாயகம் திரும்பியோரின் கடன்களை நீக்கி ஆவணங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.அவர், வெளியிட்ட அறிக்கை:பர்மா மற்றும் இலங்கையிலிருந்து, தாயகம் திரும்பியோர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு கடன்களுக்கு அடமானம் செய்யப்பட்ட நில ஆவணங்கள், கடவுச்சீட்டுகள் மற்றும் பிற ஆவணங்கள் அனைத்துக்கும் கடன் வழங்கப்பட்டுள்ளது. அது தொடர்பான விவரங்கள் அனைத்தையும் நீக்கி விட்டு, சம்பந்தப்பட்ட தாயகம் திரும்பியோர்களிடம் அனைத்து ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க அரசு அறிவுரை வழங்கியுள்ளது. சம்பந்தப்பட்ட பயனாளிகள் தகுந்த ஆவணங்களுடன், கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அல்லது தாங்கள் கடன் பெற்ற ஆர்.டி.ஓ., அலுவலகத்தை அணுகலாம்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.