உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வருவாய்த்துறை கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

வருவாய்த்துறை கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

கரூர்:கரூர் மாவட்ட, வருவாய்த்துறை கூட்டமைப்பு சார்பில், தலைவர் சுமதி தலைமையில் தாலுகா அலுவலகம் முன், நேற்று மாலை கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், வருவாய் துறையில் அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் வரை அனைத்து நிலை அலுவலர்களும், ஒரே குடையின் கீழ் செயல்பட வேண்டும், சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும், அனைத்து நிலைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில், கூட்டமைப்பு நிர்வாகிகள் அன்பழகன், முருகேசன், பாலசுப்பிரமணி, சுரேஷ் குமார், செந்தில் குமார், மோகன்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர். * குளித்தலை தாலுகா அலுவலகம் முன், நேற்று மாலை வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஒரு மணிநேரம் வெளி நடப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மகேந்திரன் தலைமை வகித்தார்.மாவட்ட இணை செயலாளர் முருகன், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் ரவி, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க பொறுப்பாளர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் செல்வராணி பேசினார். பின்னர் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை