உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரசு உதவி பெறும் தனியார் பள்ளி கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

அரசு உதவி பெறும் தனியார் பள்ளி கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

கரூர்: தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் மற்றும் அலுவலர் கூட்டமைப்பு சார்பில், மாவட்ட செயலாளர் பெஞ்-சமின் தலைமையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியு-றுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் ராஜா, மாவட்ட செயலாளர் அமுதன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பொன் ஜெயராம், ஆசிரியர்கள் ஆல்வின், மார்ட்டின் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை