உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / எம்ப்ளாயிஸ் பெடரேஷன் சார்பில் ஆர்ப்பாட்டம்

எம்ப்ளாயிஸ் பெடரேஷன் சார்பில் ஆர்ப்பாட்டம்

கரூர், கரூர் மாவட்ட டி.என்.இ.பி., எம்ப்ளாயிஸ் பெடரேஷன் சார்பில், வட்ட தலைவர் விஜயகுமார் தலைமையில், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், 65 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதிய உயர்வை அனைவருக்கும் வழங்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்கள், பகுதி நேர தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். வட்ட செயலாளர் முருகவேல், பொருளாளர் வீரமணி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை