உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தேவேந்திரகுல கல்வி குடும்ப 20ம் ஆண்டு முப்பெரும் விழா

தேவேந்திரகுல கல்வி குடும்ப 20ம் ஆண்டு முப்பெரும் விழா

குளித்தலை, குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., மேட்டுமருதுாரில், நேற்று முன்தினம் இரவு தேவேந்திரகுல கல்வி குடும்பம் சார்பில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டபடிப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியரக்கு பாராட்டு, பரிசு வழங்கல், சிறப்பு செய்தல் ஆகிய, முப்பெரும் விழா நடந்தது. துணை தாசில்தார் ஜெயவேல் காந்தன் தலைமை வகித்தார். வக்கீல்கள் வாசுதேவன், பாலகுமார், திராவிடமணி, ரதி, தலைமை ஆசிரியர்கள் காளியம்மாள், குமார், ஆசிரியர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்வி குடும்ப பொறுப்பாளர் வினோத் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு, எஸ்.ஐ., ராஜேந்திரன் பரிசு வழங்கி பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை