கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி
கரூர், கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளி தீக்கு-ளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடந்தது. குளித்தலை அருகே கே.உடையாபட்டியை சேர்ந்த முத்துசாமி, 42, என்பவர் மனு அளிக்க வந்த போது, தனது உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொ-லைக்கு முயன்றார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர்.பின், அவர் கூறியதாவது: எனது பட்டாவில் சம்பந்தமில்லாத மற்றொருவர் பெயர் இருக்கிறது. அதனை அகற்றக்கோரி குளித்தலை தாலுகா அலுவலகத்தில் புகார் அளித்தேன். ஆனால், புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல், ஆறு மாதங்களுக்கு மேல் அலைக்கழித்து வருகின்றனர்.இவ்வாறு கூறினார்.இதையடுத்து, தான்தோன்றிமலை போலீஸ் ஸ்டேஷனுக்கு, விசாரணைக்காக போலீசார் அவரை அழைத்து சென்றனர்.