உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கல்

மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கல்

அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில், திருக்குறள் திருப்பணித் திட்ட நுண் பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது.ஒருங்கிணைப்பு கண்காணிப்பாளர் பாவலர் எழில்வாணன் வரவேற்றார். பள்ளப்பட்டி அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி உதவி தலைமையாசிரியர் தாசுதீன் தொடங்கி வைத்தார்.பயிற்றுனர் மைதீன் பிச்சை வரவேற்றார். திருக்குறள் திருப்பணித்திட்ட பயிற்சியாளர்களாக, 50 மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. உதவி தலைமையாசிரியர் நாகூர் மீரான் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை